வினோத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் புகழ் பெற்ற ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்த கோயிலின் இந்த வருட திருவிழா கடந்த 18 ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்ன வென்றால் அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் 7 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பூசைகள், செய்வர். மேலும் கோயிலில் அம்மனுக்கு என்ன என்ன சிறப்பு அலங்காரம் செய்வார்களோ அது போன்றே செய்வது வழக்கம்.அம்மன் வேடம் தரித்த அந்த 7 சிறுமிகளும் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்குவர்.இந்த கோவிலில் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். ஆண்கள் வைக்கோலை தரித்து உடல் முலுவதும் கட்டியும், பெண்கள் தங்களது நேர்த்தி கடனை பனங்கள்ளையும், பாலயையும் கலந்த மண் சட்டியில் கலந்து கொண்டு வந்து அம்மனுக்கு படைக்கின்றனர்.இந்த வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறுமிகளை வழிபட்டனர்.
எருமை ரத்தத்தைக் குடித்து ஆடித் திருவிழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடித் திருவிழாவில் எருமை ரத்தத்தை குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்திய வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக்குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் பாசி, ஊசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சிஅம்மன், அய்யனார், பாண்டி ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இவர்களில் அருளாந்து என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் முதல் தேதியன்று ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சிலையை செய்து ஊர்வலமாக திருவாடானைக்கு எடுத்து வந்தனர். உடன் நேர்த்திக்கடன் செலுத்த 2 எருமை மாடுகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.ஆடி மாதம் பிறந்ததையொட்டி, அதிகாலை 4 மணியளவில் பத்திரகாளியம்மனுக்கு 2 எருமை மாடுகளை பலிகொடுத்தனர். அப்போது எருமை மாட்டில் இருந்து பீறிட்டு வெளியேறிய ரத்தத்தால் சாமி சிலைக்கு அபிஷேகம் செய்ததுடன் அருளாந்து குடும்பத்தினர் அந்த ரத்தத்தை குடித்தனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் எருமை ரத்தத்தைக் குடித்தனர்.இந்த வினோத நேர்த்திக்கடன் பற்றி அருளாந்து குடும்பத்தினர் கூறுகையில், சுமார் 24 தலைமுறையாக ஆண்டுதோறும் ஆடி மாதம் பூஜை செய்து வருவதாகவும், தங்களின் குடும்ப நன்மைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் எருமை மாடுகளை பலிகொடுத்து ரத்தத்தை குடிப்பதாகவும் தெரிவித்தார். எருமை மாட்டிறைச்சியை பத்திரகாளியம்மன் சாமி கும்பிடுபவர்கள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்றும், திருவிழாவின் மறுநாள் மது எடுப்பு நடக்கும். இதில் மாட்டின் தலை, கொம்பை ஊர்வலமாக எடுத்து சென்று ஒரு புதரில் வைத்து சாமி கும்பிட்டு திருவிழாவை நிறைவு செய்வோம் என்றும் கூறினார்.ஆடி மாதம் என்றாலே ஆங்காங்கே அம்மன் வீதி உலா, கஞ்சி ஊற்றுதல், திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் திருவிழாவில் வினோத திருவிழாவாக எருமை ரத்தம் குடித்து அதன் கறியைச் சாப்பிடுவது சம்பந்தப்பட்ட மக்களின் நம்பிக்கை.